கோவாவின் தலைநகர் பனாஜி, வாஸ்கோ நகரம் ஆகியவற்றுக்கு இடைப்பட்ட விரைவுச் சாலையில் சிகாலிம் கிராமத்துக்கு அருகில் அமோனியா வாயு நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று நேற்று அதிகாலை 2.45 மணி அளவில் கவிழ்ந்தது. அதிலிருந்து அமோனியா வாயு கசிந்ததால் சிலிகாம் கிராமத்திலிருந்த அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மூச்சுவிட சிரமம் ஏற்பட்டதால் இரண்டு பெண்கள் மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர்.
கோவா டபோலிம் விமான நிலையத்துக்கு சில கிலோமீட்டர் தூரத்தில் அமைந் திருக்கும் சிகோலிம் கிராமத்தில் சுமார் 300 வீடுகள் இருக்கின்றன. சம்பவ இடத்துக்கு பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புக் குழு ஆகியன உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் போக்கு வரத்தும் நிறுத்திவைக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக சம்பவ இடத்திற்கு அருகில் இருப்போர் முகக் கவசம் அல்லது ஈரமான துணியைக் கொண்டு மூக்கை மூடிக்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். வாஸ்கோவில் உள்ள 'மோர்மு காவோ போர்ட் டிரஸ்டி'லிருந்து 'ஸுவாரி இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்துக்கு அந்த டேங்கர் லாரி ரசாயனப் பொருளை ஏற்றிச் சென்றதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

