வடக்கு ஐரோப்பாவை தாக்கிய சூறாவளி; ஒன்பது பேர் மரணம்

வடக்கு ஐரோப்பாவை தாக்கிய சூறாவளி; ஒன்பது பேர் மரணம்

1 mins read

பெர்லின்: வடக்கு ஐரோப்பாவைத் தாக்கிய கடும் புயலால் இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர். ஆகாய, ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் தாக்கிய சூறாவளியால் குறைந்தது ஒரு நாள் முழுவதும் ஜெர்மனியில் நீண்ட தொலைவு ரயில் போக்கு வரத்து முடங்கியது. உள்நாட்டு விமானச் சேவைகளும் நிறுத்தப் பட்டன. அவசர கால சேவையில் பணி புரிந்த இரண்டு தீயணைப்பாளர்க ளும் கனரக வாகன ஓட்டுநர்கள் இருவரும் உட்பட ஆறு பேர் ஜெர்மனியில் உயிரிழந்துவிட்டனர்.

இரு கனரக வாகன ஓட்டுநர்களும் தங்களின் வாகனங்கள் பலத்த காற்றால் பறந்ததால் அதன் ஓட்டு நர்கள் மரணமடைந்தனர். மற்றொருவர் தனது வாகனத் தின் கட்டுப்பாட்டை இழந்ததால் ஒரு கனரக வாகனத்தில் மோதி உயிரிழந்தார். ஜெர்மனியின் வடக்கு ரைன்= வெஸ்ட்ஃபேலியா மாநிலத்தில் முகாமிலிருந்த 59 வயது ஆடவர் மீது மரம் சாய்ந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார் என்று ஜெர்மனியின் போலிசார் தெரிவித்துள்ளனர்.