அமெரிக்க அரசுக்கு நெருக்கடி

1 mins read

வா‌ஷிங்டன்: குறுகிய கால செலவு மசோதா சிங்கப்பூர் நேரப்படி இன்று நண்பகல் 12 மணிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டா யத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் நாடாளுமன்றத் தில் உள்ள குடியரசுக் கட்சித் தலைவர்களும் உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் அமெரிக்க அரசாங்கமும் அரசு சார்ந்த அமைப்புகளும் செயல் இழக்காமல் இயங்க முடியும் என்ற நெருக்கடியான நிலை நிலவி வருகிறது. அரசாங்கம் செயலிழந்தால் அரசின் அனைத்துப் பிரிவுகளில் உள்ள ஊழியர்களும் தற்காலிக ஊதியமில்லா விடுப்பில் செல்ல வேண்டும். பொதுப் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு துறைகளில் உள்ள இதர அத்தியாவசிய ஊழியர்கள் தொடந்து வேலை செய்தாலும் சிலருக்கு ஊதியம் வழங்கப்படாது. இதுபோன்ற நெருக்கடி நிலை யால் அரசாங்க ஊழியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். பங்குச் சந்தையும் பாதிக்கப்படுவ தோடு வெளிநாடுகளில் அமெரிக் காவின் நம்பகத்தன்மையும் ஆட்டம் காணும்.