தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்

1 mins read

ஜகார்த்தா: அபு சாயஃப் தீவிரவாதிகளால் ஓராண்டுக்கு மேலாக கடத்தப்பட்டு அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள இரு இந்தோனீசிய மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த இருவரும் நாடு திரும்புகின்றனர் என்றும் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. கிழக்கு மலேசியாவின் சாபா மாநிலத்திற்கு அருகில் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் 2016ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வெவ்வேறு படகிலிருந்து கடத்தப்பட்டனர். குடிநுழைவு ஏற்பாடுகள் முடிந்த பின்னர் பிலிப்பீன்ஸிலிருந்து இந்தோனீசியா வந்தடைவார்கள். அபு சாயஃப் தீவிரவாதிகள் பிலிப்பீன்ஸின் மிண்டனாவ் நகரை தலைமை மையமாக வைத்துள்ளனர். மணிலாவில் உள்ள இந்தோனீசியத் தூதரகம் இரு மீனவர்களுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.