பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதை: லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள்

பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதை: லஞ்சம் பெற்ற அரசியல்வாதிகள்

2 mins read

பெட்டாலிங் ஜெயா: பினாங்கு கடலடிச் சுரங்கப் பாதைத் திட்டத் தின் சாத்தியம் பற்றி ஆராய்வதற் கான ஆய்வு விருதுகள் வழங்கப் பட்டதில் ஊழல் நடந்துள்ளதாகத் தெரிய வந்துள்ள நிலையில் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளி டம் விசாரணை நடத்தப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு அமைப்பு கூறியுள்ளது. ரொக்கமாக வழங்கப்பட்டுள்ள ஆய்வு விருதுகள் சம்பந்தப்பட்ட வர்களின் தவறான செயல் என்று ஊழல் தடுப்பு அமைப்பு கூறியுள் ளது. சில அரசியல்வாதிகள் சில நூறாயிரம் ரிங்கிட் வாங்கியுள்ள னர். மில்லியன் கணக்கான ரிங்கிட் ஊழல் பணத்தையும் சில அரசியல்வாதிகள் லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என்று கூறப்பட்டுள் ளது. எந்த அளவிற்கு இந்தத் தவ றான செயல் நடந்துள்ளது என்றும் பணப் பரிவர்த்தனை எங்கு நடந்தது என்றும் புலன்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இரு நிலங்கள் பெயர்மாற்றம் கண்டுள்ளது என்றும் அது இந்த ஆய்வு விருதாக வழங்கப்பட்டிருக் கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. விசாரணைக் குழு பினாங்கி லும் கிள்ளான் பள்ளத்தாக்கில் மொத்தம் 42 இடங்களில் 76க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது என்றும் ஊழல் தடுப்பு அமைப்பின் துணைத் தலைவர் அஸாம் பாகி கூறியுள் ளார். விசாரணை முடிவுபெற இன் னும் பலரை விசாரிக்க வேண்டியுள் ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், 'டத்தோ' பட்டம் பெற்ற இருவர் இந்த விவகாரம் குறித்து ஜனவரி 9ஆம் தேதி தனித்தனியே கைது செய்யப் பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் தலா 200,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.