அமெரிக்க போர்க்கப்பல் விதி மீறியதாக சீனா குற்றச்சாட்டு

அமெரிக்க போர்க்கப்பல் விதி மீறியதாக சீனா குற்றச்சாட்டு

1 mins read

ஷங்காய்: தென் சீனக் கடல் அரசுரிமையை அமெரிக்க போர்க்கப்பல் மீறிவிட்டதாக சீனா புகார் தெரிவித்துள்ளது. தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய ஹுவாங்யான் தீவின் 12 கடல் மைல் தொலைவில் யுஎஸ்எஸ் ஹோப்பர் ஏவுகணை அழிப்புக் கப்பல் சென்றதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தத் தீவை சீனாவோடு சேர்ந்து பிலிப்பீன்சும் உரிமை கொண்டாடி வருகிறது. தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கக் கடற்படைக்கு எதிராக சீனாவின் ஆக அண்மைய குற்றச்சாட்டு இது. வடகொரியா வின் அணுவாயுதத் திட்டத்தை முறியடிக்க சீனாவின் ஒத்துழைப்பை அமெரிக்கா நாடும் வேளையில் இந்த குறை கூறல் எழுந்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பல் யுஎஸ்எஸ் ஹோப்பர் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவருகே சென்றதை அமெரிக்காவின் இரு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.