பாசிர் கூடாங்: ஜோகூரை புதிய பொருளியல் மண்டலமாக உருவாக்க விரும்புவதாகவும் அதற்கான நீண்டகாலத் திட்டங்கள் அர சாங்கத்தின்வசம் இருப்பதாகவும் அம் மாநில முதல்வர் முகமது காலித் நூர்தின் தெரிவித்துள்ளார். "ஆர்டிஎஸ் எனப்படும் பெருவிரைவு ரயில் திட்டம். ஜிமாஸ்=ஜோகூர் பாரு இரட்டை ரயில்தடத் திட்டம், கோலாலம்பூர் =சிங்கப்பூர் அதிவிரைவு ரயில் திட்டம், சுத்திகரிப்பு, பெங்கெராங் பெட்ரோ கெமிக்கல் ஒருங்கிணைப்பு மேம்பாட்டுத் திட்டம் போன்ற பெருந்திட்டங்கள் நிறை வுற்றதும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் ஜோகூர் சிறப்பான இடத்தைப் பெறும். "குறிப்பாக, இந்தப் பெருந்திட்டங்களோடு இதர மேம்பாட்டுப் பணிகளும் நடைபெறு வதன் மூலம் ஜோகூர் மாநிலத்தில் 250,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்," என்று நேற்றுக் காலை நடைபெற்ற 44வது பெற் றோர்=ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பங் கேற்றுப் பேசுகையில் திரு நூர்தின் தெரி வித்தார்.
வெளிநாட்டு முதலீடுகளை மாநில அர சாங்கம் ஈர்க்கும் முயற்சிகளின் தொடர்பில் கேள்வி எழுப்பும் அரசியல் கட்சியினருக்கு அவர் பதிலளித்தார். "இதுபோன்ற முதலீடு கள் இல்லாமல் மாநில அரசாங்கத்தின் பொருளியலை முன்னேற்ற இயலாது. இங்குள்ள மேம்பாட்டு நடவடிக்கைகள் எந் தளவுக்குத் துடிப்பானவை என்றும் நம்மால் உணர முடியும்," என்றார் அவர். ஆளும் பாரிசான் நேஷனல் கூட்டணி யிடம் இருப்பதைப் போன்று ஜோகூரை மேம்படுத்தும் எந்தவொரு உருப்படியான மேம்பாட்டுத் திட்டமும் எதிர்க்கட்சிகளிடம் கிடையாது என்றும் அவர் கடுமையாகக் கூறினார்.

