காபூல் ஹோட்டல் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் மரணம்

காபூல் ஹோட்டல் தாக்குதல்: 30க்கும் மேற்பட்டோர் மரணம்

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள இன்டர்கான்டி னென்டல் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் மரணமுற்றதாகவும் நூற்றுக்கணக் கானோர் காயமுற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக் கக்கூடும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.

இதுவரை உயிரிழந்தவர்களின் 19 சடலங்கள் நகர மருத்துவ மனைகளுக்கு எடுத்துச்செல்லப் பட்டதாகவும் அதில் ஆறு சடலங் கள் வெளிநாட்டவர்களின் சடலங் கள் என்றும் பொது சுகாதார அமைச்சின் பேச்சாளர் வஹித் மஜ்ரொ கூறியுள்ளார். இந்நிலையில், உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்து விட்டதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் பாவ்லொ க்லிம்கின் தனது டுவிட்டரில் பதிவு செய்துள் ளார். மரணமடைந்தவர்களில் ஹோட் டல் ஊழியர்கள், அங்கு தங்கிய விருந்தினர்கள், தாக்குதல் நடத் திய பயங்கரவாதிகளை எதிர்த்த பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகி யோர் அடங்குவர். தாக்குதல்காரர்கள் ஐவரும் கொல்லப்பட்டதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் நஜிப் தனேஷ் தெரிவித்துள்ளார்.