வடகொரிய தலைவரின் உருவப்படத்தை எரித்த தென்கொரியர்கள்

வடகொரிய தலைவரின் உருவப்படத்தை எரித்த தென்கொரியர்கள்

1 mins read

சோல்: தென்கொரியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொ ரியா பங்கேற்பது குறித்து அதிருப்தி நிலவிவரும் வேளை யில் நேற்று தென்கொரியர்கள் சிலர் வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். வடகொரியாவின் சாம்ஜியோன் இசைக்குழுத் தலைவர் ஹயோங் சோங் வோல் உட்பட வடகொரிய பேராளர்கள் தென்கொரிய தலை நகர் சோலுக்குச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான இடங்களைப் பார்வையிட நேற்று சென்றபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

போராட்டங்களின் ஒரு பகுதி யாக பழமைவாத விமர்சகர்கள் சிலர் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உருவப் படத்தை தீயிட்டு எரித்துள்ளனர். ஹியோங் தனது குழுவினரோடு சோலின் மத்திய ரயில் நிலை யத்தில் வந்து இறங்கியபோது ரயில் நிலையத்தின் படிக்கட்டு களில் உருவப்படம் எரிக்கப்பட் டுள்ளது. வடகொரியாவின் அண்மைய அணுவாயுத சோதனைகளால் உலக நாடுகள் பற்பல தடைகளை வடகொரியா மீது நடைமுறை படுத்தியிருந்தது. அதன் தொடர் பில் ஓராண்டுகாலமாகவே இரு கொரிய நாடுகளுக்கு மத்தியில் பதற்றம் நிலவி வந்திருந்தது.

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் உருவப் படத்தை எரித்ததோடு அந்நாட்டுக் கொடியையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்தனர். வடகொரியாவிற்கு எதிரான முழக்கங்களையும் தென்கொரிய ஆர்ப்பாட்டக்காரர்கள் முழங்கினர். படம்: ஏஎஃப்பி