வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த இரண்டு பொருட்களும் சீனா, தென் கொரியா போன்ற நாடுகளிலிருந்து மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் சீனாவிலிருந்து வரும் எஃகு, அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் கூடுதலான வர்த்தக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நேற்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
சலவை இயந்திரம், சூரிய சக்தி தகடுகளுக்கு அதிரடி வரி
1 mins read

