2019ல் அமெரிக்கத் தூதரகம் ஜெருசலத்துக்கு மாறும்

1 mins read

ஜெருசலம்: 2019ஆம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவின் தூத ரகம் ஜெருசல நகருக்கு மாற்றப் படும் என்று அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியுள் ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இந்த தகவலை வெளியிட்டார். இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலத்துக்கு மாற்றும் அமெரிக்காவின் முடி வால் பாலஸ்தீனர்கள் ஆத்திர மடைந்துள்ளனர். அனைத்துலக நாடுகளும் தங்களுடைய கவலையை வெளிப் படுத்தியுள்ளன. திரு பென்ஸ் தமது பேச்சில் இஸ்ரேலுடனான அமைதித் பேச்சை பாலஸ்தீனர்கள் மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையே பிரஸ்ஸல்ஸ் நகரில் பாலஸ்தீன அதிபர் அப் பாஸை சந்தித்த ஐரோப்பிய சங் கத்தின் வெளியுறவுக் கொள்கை களின் தலைவர், கிழக்கு ஜெரு சலத்தை பாலஸ்தீனத்தின் தலை நகரமாக்கும் விருப்பத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.