வாஷிங்டன்: அமெரிக்காவில் தற் காலிக நிதி மசோதாவுக்கு குடி யரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து முடங்கிக் கிடந்த அரசாங்கம் செயல்படத் தொடங் கியது. இளம் சட்டவிரோத குடியேறி களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சியினரின் கோரிக் கையை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொண்டதால் மசோதா சுமூ கமாக நிறைவேறியது. இதையடுத்து அதிபர் டோனல்ட் டிரம்ப் மசோதாவில் கையெழுத்திட்டு அரசு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இது, நான்காவது முறையாகக் கொண்டு வரப்பட்ட குறுகிய கால நிதி மசோதாவாகும். செனட் சபையில் 81-18, பிரதி நிதிகள் சபையில் 266-150 என்ற வாக்களிப்பில் மசோதா நிறை வேற்றப்பட்டது. இருப்பினும் இந்தத் தற்காலிக செலவின மசோதாவால் பிப்ரவரி 8ஆம் தேதி வரை மட்டுமே அரசாங் கம் நீடிக்கும்.

