200,000 கொடையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் அம்பலம்

1 mins read

மலேசியாவில் 200,000 பேருக்கும் அதிக உறுப்பு நன்கொடையாளர் களின் தனிப்பட்ட விவரங்கள் இணையத்தில் அம்பலமாகி இருப் பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் 46.2 மில்லியன் கைத்தொலைபேசியாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியா னதாக மூன்று மாதத்திற்கு முன் தெரிவிக்கப்பட்டது.

கணினியில் தகவல்களைத் திருடும் பேர்வழிகளிடம் மலேசியா வின் சுமார் 200,000 உறுப்பு நன் கொடையாளர்களும் அவர்களின் உறவினர்களும் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை இழந்து விட்டார்கள் என்று Lowyat.net என்ற இணையத் தொழில்நுட்பத் தளம் தகவல் வெளியிட்டுள்ளது . இதனிடையே, இந்த இணையத் தளத்தின் நிர்வாகிகளுக்கு போலிஸ் அழைப்பாணை பிறப்பிக் கும் என்று மலேசியாவின் உயர் போலிஸ் தலைவர் முகம்மது ஃபூசி ஹாருன் தெரிவித்தார்.

நாட்டில் இரண்டு தடவை இணையத் தகவல்கள் திருடப்பட் டிருப்பதாக வெளியான செய்தி களைத் தாங்கள் சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த இரு தகவல்களும் ஒரே தளத்திலிருந்து வெளியாகி இருப்பது போல் தோன்றுகிறது என்றார் அவர். இந்த விவகாரத்தை குற்றவியல் புலன்விசாரணைத் துறை கையாண்டு வருவதாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் குறிப் பிட்டார். நன்கொடையாளரின் முழுப் பெயர், அவருடைய அடை யாள எண், உறவினரின் முழுப் பெயர், உறவின் விவரம், இனம், பால் போன்ற பல தகவல்களும் இணையத்தில் அம்பலமாகி இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தத் தகவல்கள் 1997 முதல் 2016 வரை தொகுக்கப்பட்டவை. அவை 26 செப்டம்பர் முதல் இணையத்தில் கிடைத்து வந்து உள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.