இந்தோனீசிய பங்குச்சந்தை: சரிந்த பகுதி பயன்பாட்டுக்குத் திறப்பு

இந்தோனீசிய பங்குச்சந்தை: சரிந்த பகுதி பயன்பாட்டுக்குத் திறப்பு

1 mins read

ஜகார்த்தா: சரிந்து விழுந்த இந்தோனீசிய பங்குச் சந்தையின் ஒரு பகுதி மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் பங்குச்சந்தையின் இடைத்தள மாடி நடைபாதை சரிந்ததில் 77 பேர் காயமுற்றனர். சுடிர்மான் வர்த்தக வட்டாரத்தில் அமைந்திருக்கும் பங்குச்சந்தைக் கட்டடத்தின் அந்தப் பகுதிக்குக் கூடுதல் வலு சேர்க்கும் வகையில் செப்பனிடப்பட்டு இருப்பதாகச் சொல்லப்பட்டது. இம்மாதம் 15ஆம் தேதி நிகழ்ந்த சரிவுக்கான காரணம் குறித்து போலிசார் விசாரணை தொடர்கிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பங்குச்சந்தைக் கட்டடத்தைப் பார்வையிடச் சென்றிருந்த மாணவர்கள் என்றும் கூறப்பட்டது. 2018-01-25 06:00:20 +0800