பாலியல் துன்புறுத்தல்: மருத்துவருக்கு 175 ஆண்டு சிறை

பாலியல் துன்புறுத்தல்: மருத்துவருக்கு 175 ஆண்டு சிறை

1 mins read
24ac7801-9c41-4819-bfbd-2caef82444e7
-

லான்சிங்: நீண்ட காலமாக அமெரிக்காவின் சீருடற்பயிற்சி குழுவின் மருத்துவராக பணி ஆற்றிய 54 வயது லேரி நசார் (படம்) நேற்று முன்தினம் மிச்சி கன் நீதிமன்றத்தில் பாலியல் குற்றங்களுக்காக 175 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றார். அவரது பாதுகாப்பில் இருந்த சீருடற்பயிற்சி மாணவி களைப் பாலியல் தொல்லைக ளுக்கு உட்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட 160க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல நாட்களாக விசாரணை நடத் தப்பட்ட பின்னர் நசாருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

லேரிக்கு தண்டனை விதிக் கப்பட்டதை அடுத்து நசார் வேலை செய்த மிச்சிகன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் தலைவரும் பதவி விலகினார். துன்புறுத்தலை நிறுத்துவ தற்கு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்று அவரை பலர் விமர்சித்து வந்துள்ள நிலையில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்க சீருடற்பயிற்சிக் குழுவின் இயக்குநர்கள் அனைவரும் பதவி விலகும்படி அமெரிக்க ஒலிம்பிக் செயற் குழுவின் தலைவர் கேட்டுக் கொண்டார்.