இந்தோனீசியா நிலநடுக்கம்: ஒருவர் பலி

இந்தோனீசியா நிலநடுக்கம்: ஒருவர் பலி

1 mins read
ac2ed692-60e2-46e7-b9ad-a3351ce352cf
-

ஜாவா தீவின் தெற்கே செவ்வாய்க் கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 40 வயது நானா கர்யானா என்ப வர் உயிரிழந்தார் என்று சமுதாய விவகார அமைச்சு கூறியுள்ளது. மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டதோடு ஆயிரத்துக்கும் மேலான வீடுகள் சேதமடைந்துள்ள தாக கூறப்பட்டது. தலைநகர் ஜகார்த்தாவிலும் நிலநடுக்கத்தின் காரணமாக அரசு அலுவலகங்கள் உட்பட ஒருசில கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பந்தென் நகரில் உள்ள சுகர்னொ-ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில் கண்ணாடி சுவர் விழுந்து சிதறியது.

தலைநகரில் மட்டுமே இந்தப் பேரிடரின் பாதிப்பு $981.5 மில்லி யன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. புதன்கிழமையும் இந்தோனீசி யாவில் நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவாகியது. அந்தப் பேரிடரால் காயமோ சேதமோ பதிவாகவில்லை.

செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் 1,000க்கும் மேற்பட்ட கட்டடங்களைச் சேதப்படுத்தியது. படம்: ஏஎஃப்பி