இந்தோனீசிய உள்ளாட்சி தேர்தல்: ஊழல் தடுப்பு முயற்சி மும்முரம்

1 mins read

ஜகார்த்தா: இவ்வாண்டு இந்தோனீசியா முழுவதும் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவது, இதர ஊழல் செயல்களில் ஈடுபடுவது ஆகிய குற்றச் செயல்களைத் தடுக்க இந்தோனீசிய அரசாங்க அமைப்பு கள் ஏற்பாடுகளை செய்து வருகின் றன. 2011 தேர்தல் ஏற்பாட்டாளர்கள் சட்டத்தின்படி விதிமீறல்களைத் தடுக்கவும் லஞ்சம் கொடுத்து வாக்குகள் வாங்குவது போன்ற ஊழல் செயல்களைச் செய்பவர் களைக் கண்டிக்கவும் முயற்சிகள் எடுக்கப்படும். நடவடிக்கைகளை பவஸ்லு எனும் தேர்தல் மேற்பார் வையாளர் அமைப்பு முன்னின்று எடுக்கும்.

தேசிய போலிஸ் படை, நிதி பரிவர்த்தனை அறிக்கைகள் மற் றும் ஆய்வு மையம் முதலிய அமைப்புகளுடன் பவஸ்லு இணைந்து செயல்படுவதற்கான முயற்சிகள் எடுப்பதற்கு பவஸ்லு அமைப்பின் ஆணையாளர் முகமது அஃபிஃபுதின் உறுதியளித்தார். பணம் சம்பந்தப்பட்ட அரசிய லைத் தடுக்க இந்த அமைப்புக ளுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து அவை செயல்படும் என்று திரு அஃபிஃபுதின் தெரிவித்ததாக ஜகார்த்தா போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டது. வாக்களிப்பு தினத்திற்கு முதல் நாள் தொடங்கவுள்ள ஒரு திட்டத் திற்கு ஊழல் தடுப்பு ஆணையத்து டன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்த சாத்தியமும் ஆராயப்படும் என்று பவஸ்லு அமைப்பு கூறியுள் ளது.