மகாதீர் மனைவியிடம் போலிஸ் விசாரணை

மகாதீர் மனைவியிடம் போலிஸ் விசாரணை

1 mins read
5c86ae9a-95f4-455c-9466-8c93ffee68e1
-

கோலாலம்பூர்: கடந்த ஆண்டு நடை பெற்ற 'பெண்களுக்கு எதிரான நச்சு அரசியல்' என்ற பேரணியில் பேசியது குறித்து மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மனைவி டாக்டர் சித்தி ஹஸ்மா முஹமட் அலி யிடம் (படம்) நேற்று போலிசார் விசாரணை நடத்தினர். அவரது மகள் படுக்கா மரினா மகாதீர் தொடர்ந்து வெளியிட்ட டுவிட்டர் தகவலில் தமது தாயாரிடம் போலிசார் விசாரணை நடத்தியதாகத் தெரிவித்தார். "காலை வணக்கம், காவல்துறை யினர் விசாரிக்கும் என்னுடைய தாய்க்கு ஆதரவுக்கரம் நீட்ட வேண்டு கிறேன்," என்று டுவிட்டர் பதிவில் அவர் தெரி வித்தார்.

2017 செப் டம்பர் 10ல் 'பெண்களுக்கு எதிரான நச்சு அரசியல்' பேரணி நடைபெற்றது. அப்போது நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தின்போது டாக்டர் சித்தி ஹஸ்மா தவிர 'பிகேஆர்' தலைவரான டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், மரினா, அம்பிகா, மரியா ஆகியோரும் பேசினர். காவல்துறையினர் அவரிடம் எவ்வளவு நேரம் விசாரணை நடத்தினர் என்பது குறித்து தகவல் இல்லை.