1.8 மி. பேருக்கு குடியுரிமை வழங்க அதிபர் டிரம்ப் திட்டம்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் குடி யேறியுள்ள சுமார் இரண்டு மில்லியன் பேருக்கு குடியுரிமை வழங்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ளது. ஆனால் இதற்கு கைமாறாக மெக்சிக்கோவுடனான எல்லையில் சர்ச்சைக்குரிய சுவர் கட்டுவதற் கான நிதி ஒதுக்கீட்டுக்கு ஜன நாயகக் கட்சியினர் ஆதரவு அளிக்க வேண்டும் என்பது டிரம்ப் நிர்வாகத்தினரின் கோரிக்கை யாகும். இதையொட்டி சுவர் கட்டும் செலவுக்கான 25 பில்லியன் டாலர் நிதிக்கு வேண்டுகோள் விடுக்கும் உத்தேச மசோதா திங்களன்று தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. சுவர் கட்டும் நிதிக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் ஜனநாயகக் கட்சியினர் அந்த திட்டத்தையும் குறைகூறி வருகின்றனர்.

சென்ற வியாழக்கிழமை அன்று வெள்ளை மாளிகை கொள்கை வகுப்பாளர் ஸ்டீபன் மெல்லரும் குடியரசுக் கட்சியினரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு குடியுரிமை வழங்கும் உத்தேச திட் டத்தின் தகவல்கள் வெளியாயின. வெள்ளை மாளிகையின் இந்த திட்டத்தை 'பெரும் திருப்புமுனை,' என்று திரு மெல்லர் வருணித்தார்.