தென்கொரிய மருத்துவமனை தீ விபத்தில் 37 பேர் பலி

தென்கொரிய மருத்துவமனை தீ விபத்தில் 37 பேர் பலி

1 mins read
767b8921-c02c-4843-8009-e6d87b8ad6d6
-

சோல்: தென்கொரியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர். எழுபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தென்கிழக்கு நகரமான மிர் யாங்கில் உள்ள செஜோங் மருத்து வமனையின் அவசர சிகிச்சை பிரிவில் தீ மூண்டதாக நம்பப்படு கிறது. தீ விபத்து நிகழ்ந்தபோது மருத்துவமனை கட்டடத்திலும் பக்கத்தில் இருந்த தாதிமை இல் லத்திலும் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தனர். தென்கொரியாவில் பத்து ஆண்டுகளில் இல்லாத இந்தப் பயங்கர தீ விபத்தில் இறந்தவர் களின் எண்ணிக்கை மேலும் அதி கரிக்கக்கூடும் என்று அஞ்சப்படு கிறது. மருத்துவமனை ஊழியர்களில் மருத்துவர், தாதி, தாதியின் உதவியாளரும் இறந்துவிட்டனர்.

மிர்யாங்கில் உள்ள மருத்துவமனையில் மூண்ட தீயை அணைக்கும் முயற்சியில் ஏராளமான தீ அணைப்பாளர்கள் ஈடுபட்டனர். படம்: ஏஎஃப்பி