மயாமி: அமெரிக்காவில் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தற்போது மிக மோசமான சளி காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை 37 குழந்தைகள் சளி காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர். நாடு முழுவதும் மருத்துவ வசதியை மக்கள் தேடி வருகின்றனர். கடந்த மூன்று மாதங்களாக H3N2 சளி காயச்சலால் ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மையம் கூறியுள்ளது.
இந்தப் பருவத்தில் மருந்தகங்களுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கும் சென்றுள்ள நோயாளிகளில் 6.6 விழுக்காட்டினர் சளி காய்ச்சலுக்காக சென்றுள்ளனர். இதற்கு முன்னர் 2009ல் அந்த விகிதம் 7.7% இருந்தது.

