பாரிஸ் நகரில் வெள்ள அபாயம்

பாரிஸ் நகரில் வெள்ள அபாயம்

1 mins read
addf7848-3161-46ee-bb47-b13f5d4ca211
-

பாரிஸ்: ஃப்ரான்ஸ் நாட்டின் செயின் ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தலைநகர் பாரிஸில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உரு வாகியுள்ளது. சில கட்டடங்களின் கீழ்த் தளங்களில் நீர் கசிவு ஏற்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகி றது. இன்னும் சில நாட்களில் ஆற்றின் நீர் மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். கனமழை பெய்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம். நகரின் சில சாலைகள் ஏற்கெ னவே தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆற்றோர வீடுகளும் வர்த்தகங்க ளும் அபாயத்துக்குள்ளாகி உள்ளன. படகு போக்குவரத்தும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

கார் தண்ணீரில் மூழ்கும் அளவிற்கு வீதிகளில் நீர் மட்டம் உள்ளதால் மக்கள் படகில் வெளியேறுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்