இதயத்தைத் துளைத்த இரும்புக் கம்பி

இதயத்தைத் துளைத்த இரும்புக் கம்பி

1 mins read
0604f194-4807-487b-9cbc-1169abf444f1
-

பிரேசில்: இரும்புக் கம்பி ஒன்று 11 வயதுச் சிறுவனின் இதயத்தைத் துளைத்த போதிலும் அந்தச் சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம் பிரேசிலில் நிகழ்ந்துள்ளது. வடகிழக்கு பிரேசிலில் உள்ள டொரிடாமா எனும் பகுதியைச் சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா என்ற அந்தச் சிறுவன் இம்மாதம் 18ஆம் தேதி வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியின் மீதேறி விளையாடிக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அப்போது கால் தவறி அங்கிருந்த பீப்பாய் ஒன்றினுள் சிறுவன் மல்லாந்தபடி விழுந்தான். அந்தப் பீப்பாய்க்குள் 'பாபிகியூ' எனப்படும் கறியைச் சுடுவதற்குப் பயன்படும் கம்பிகள் அடுக்கிவைக் கப்பட்டிருந்தன.

பீப்பாயில் இருந்த இரும்புக் கம்பி ஒன்று சில்வாவின் இடது தோள்ப்பட்டைக்குகீழே குத்தி மார்பைத் துளைத்து இதயத்தை ஊடுருவி நின்றது.

ஊடுருவி நின்றது. காயமுற்ற சில்வா இதயத்தைத் துளைத்த இரும்புக் கம்பியுடனே உடனடி யாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டான். சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், இதயத் துடிப்பால் மார்பில் துளைத்திருந்த கம்பியும் சேர்ந்து அதிர்ந்ததைக் கண்டு கம்பி இதயத்தைத் துளைத்துச் செல்வதை உறுதிப்படுத்தினர்.

சுமார் ஒன்றரை மணி நேரத் துக்கு சவாலான அறுவை சிகிச் சையை மேற்கொண்ட மருத்து வர்கள் சிறுவனின் உடலில் இருந்து கம்பியை அகற்றினர்.

இதயத்தை ஊடுருவிய கம்பியுடன் சிறுவன். படம்: இணையம்