காபூலில் குண்டுவெடிப்புத் தாக்குதல்; 40 பேர் மரணம்

காபூலில் குண்டுவெடிப்புத் தாக்குதல்; 40 பேர் மரணம்

1 mins read
c8160e77-bfca-458b-9e48-e711e4565199
-

காபூல்: ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர்; 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நடந்த சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற் றுள்ளது. ஆம்புலன்ஸ் ஒன்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் அதிகம் உள்ள பகுதியில் வெடிக்க செய்துள்ளனர். முந்தைய உள்துறை அமைச் சின் கட்டடத்திற்கு அருகில் குண்டு வெடித்ததாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் கூறியது. உயிரிழந்தவர்களின் சடலங் கள் அருகிலுள்ள மருத்துவமனை களுக்கு எடுத்துச் செல்லப்பட்ட தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் காபூலில் இன்டர்கான்டி னென்டல் ஹோட்டலில் தலிபான் அமைப்பின் ஆதரவு அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தையடுத்து காபூலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கப்பட்ட நிலையிலும் பயங்கர வாத அமைப்பு தனது கைவரிசை யைக் காட்டியுள்ளது. நேற்று நடந்த குண்டுவெடிப்பின் தாக்கத்தால் அருகில் உள்ள அலுவலகக் கட்டடங்களின் சன் னல்கள் பலமாக ஆட்டங்கண்ட தாகத் தெரிவிக்கப்பட்டது.

காபூலில் முக்கிய அலுவலகங்கள் இருக்கும் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பால் மரணமடைந்தவர்களின் சடலங்களும் காயமுற்றவர்களும் வீதிகளில் கிடந்த நிலையில் அங்கிருந்த மக்கள் தங்கள் முதுகில் அவர்களை தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸில் ஏற்றிவிட்டனர். சம்பவம் நடந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. படம்: ஏஎஃப்பி