வடகொரிய திட்டத்தை ஒடுக்க கோரிக்கை

வடகொரிய திட்டத்தை ஒடுக்க கோரிக்கை

1 mins read

பெய்ஜிங்: வடகொரிய அணுஆயுதத் திட்டத்தை ஒடுக்குவதில் ஒத் துழைப்பை அதிகப்படுத்தும்படி சீனா வுக்கு ஜப்பான் கோரிக்கை விடுத்து இருக்கிறது. சீன தலைநகர் பெய்ஜிங் கில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரா கோனோவை சந்தித்தார். அப் போது சீனாவிடம் ஜப்பான் இந்தக் கோரிக்கையை முன்வைத்தது. ஜப்பானுடன் சேர்ந்து செயல்பட்டு அந்த நாட்டுடன் கூடிய உறவை மறு படியும் வழக்கமான நிலைக்குக் கொண்டுவரலாம் என்று சீனா நம்பு வதாக ஜப்பான் அமைச்சரிடம் சீன அமைச்சர் அப்போது கூறினார்.

சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடை யில் நெடுங்காலமாக வரலாற்றுப் பூசல்கள் இருந்துவருகின்றன. இரண் டாவது உலகப் போருக்கு முன்பும் இரண்டாவது உலகப் போரின்போதும் சீனா மீது ஜப்பான் படை எடுத்தது. அந்தக் காரியத்திற்கு இன்னமும் உரிய முறையில் ஜப்பான் வருத்தம் தெரிவிக்கவில்லை என்று சீனா அடிக் கடி குறைகூறி வருகிறது. சீனா, உலகின் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் நாடாகும். ஜப்பான் மூன்றாவது ஆகப் பெரிய பொருளியல் நாடாகத் திகழ்கிறது. கிழக்குச் சீன கடலில் உள்ள சில திட்டுகள் தொடர்பில் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெடுங் காலமாக எல்லைத் தகராறுகள் இருந்து வருகின்றன.