அமெரிக்க அதிபர் புதனன்று கொள்கை உரையாற்றுவார்

அமெரிக்க அதிபர் புதனன்று கொள்கை உரையாற்றுவார்

1 mins read

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப், சிங்கப்பூர் நேரப்படி புதன் கிழமை காலை 10 மணிக்கு நாடாளுமன்றக் கொள்கை உரை யாற்றுகிறார். அந்த உரையை, அமெரிக்க மக்களை ஐக்கியப்படுத்த தனக் குக் கிடைத்த வாய்ப்பாக அதிபர் பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளியல் நில வரம் நல்ல நிலையில் இருப்பதை பற்றியும் அடுத்த வரித் திட்டம் குறித்தும் குடிநுழைவு, வர்த்தகம், அடிப்படை வசதிகள், தேசிய பாதுகாப்பு குறித்தும் அதிபர் தமது உரையில் குறிப்பிடுவார் என்று அதிகாரிகள் கூறினர்.