காபூல்: பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆகியது

காபூல்: பயங்கரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆகியது

1 mins read

காபூல்: ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் ஒரு மருத்துவ வாகனத்தில் வந்த மனித வெடி குண்டு வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை ஏறக்குறைய 100 ஆகிவிட்டது. ஏராளமானவர்கள் காயம் அடைந்து மருத்துவமனை யில் கிடக்கிறார்கள். இதனிடையே, பயங்கரவாதம் பற்றி அந்நகர மக்கள் கடும் கோபம் அடைந்து வருவதாகவும் அவர்கள் பயந்துபோய் விரக்தியு டன் இருப்பதாகவும் தெரிவிக்கப் படுகிறது. பயங்கரவாதிகள் காபூலைத் தாக்கக்கூடிய ஆற்றலுடன் திகழ் கிறார்கள் என்பதை நினைத்து மக்கள் கடும் கோபத்தை வெளிப் படுத்தி வருவதாகத் தெரிகிறது.

சனிக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்கு தலிபான் தரப்பு பொறுப்பேற்றுக்கொண்டு இருக்கிறது. அந்தத் தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 95 பேர் கொல்லப்பட்டனர். 191 பேர் காயம் அடைந்தனர். இதனிடையே, காபூல் தாக்குதல் கள் பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், தலிபான் தரப்புக்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக் கிறார். உலகத் தலைவர்களும் அந்தத் தாக்குதலைக் கண்டித்து இருக்கிறார்கள். ஆப்கானின் சராசரி குடிமக்கள் சமூக ஊடகங் களில் தங்கள் கோபத்தையும் பயத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.