நிலாய்: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் காஜாங்கில் உள்ள கடையில் மலேசிய சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக் கிழமை நடத்திய அதிரடி சோதனை யில் 18 மில்லியன் ரிங்கிட் ($6 மில்லியன்) மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின. அதிகாரிகள் அங்கிருந்த 18 வெளிநாட்டவர்களை யும் கைது செய்துள்ளனர். தலா 25 கிலோகிராம் எடையுள்ள 37 சாக்கு மூட்டைகளில் அந்த போதைப் பொருட்கள் கண்டுபிடிக் கப்பட்டன என்று சுங்கத் துறை தலைமை இயக்குநர் சுப்ரமணியம் துளசி நேற்று கூறியுள்ளார். 18 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அந்த 18 பேரில் 10 பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வர்கள்.
மியன்மாரிலிருந்து நால்வ ரும் இந்தோனீசியாவிலிருந்து நால் வரும் பிடிபட்டவர்களில் அடங்கு வர். அவர்களில் ஏழு பேரிடம் மட்டும் தான் முறையான பயண ஆவனங் கள் இருந்ததாகக் கூறப்பட்டது. ஹெராயின், கெட்டமின் ஆகி யவை கண்டுபிடிக்கப்பட்டன. கடை யில் பதுக்கி வைப்பதற்காக இரு கொள்கலன்களிலிருந்து 1,885 மூட்டைகளை இறக்கிக் கொண்டு இருந்தபோது அவர்கள் பிடிபட்டனர். மலேசியாவின் மேற்குக் கரையி லுள்ள கிள்ளான் துறைமுகம் மூலம் அந்த மூட்டைகள் மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவற் றில் உப்பு உள்ளதாகவும் சோதனை யின்போது அந்த வெளிநாட்டவர் தெரிவித்துள்ளனர்.
கொள்கலனிலிருந்து மூட்டைகள் இறக்கப்பட்டபோது சுங்கத் துறை அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். $6 மில்லியன் பெறுமானமுள்ள போதைப் பொருட்கள் சோதனையில் பிடிபட்டன. படம்: பெர்னாமா

