மணிலா: பிலிப்பீன்ஸின் மாயோன் எரிமலை கடந்த இரண்டு வாரங்களாக குமுறி வரும் நிலையில் அந்தப் பகுதியிலிருந்து இதுவரை சுமார் 70,000 பேர் வெளியேறியுள்ளனர். அவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கி வரும் நிலையில் இதுவரை அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் நிரம்பி வழிவதாக தகவல்கள் கூறுகின்றன. இட நெருக்கடி மட்டுமல்லாமல் சுகாதார பிரச்சினைகளும் தங்குவதற்கு வசதி இல்லாத நிலையும் உருவாகியுள்ளது. எரிமலைக்கு சற்று அப்பால் உள்ள பகுதிக்கு நேற்று சென்று பார்வையிட்ட பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டர்டே, அங்கு உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக உறுதியளித்துள்ளார். அவர்களின் தேவைகளுக் காக முதல் தவணையாக $1.3 மில்லியன் வழங்கியுள்ளார்.
மாயோன் எரிமலை குமுறல்: தற்காலிக முகாம்களில் 70,000 பேர்
1 mins read

