பாரிஸ்: நிரம்பி வரும் செயின் ஆறு உச்ச அளவை நேற்று எட்டியது. நீர்மட்டம் சாதாரண அளவைவிட நான்கு மீட்டர் உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டது. வெள்ள அபாயத்தால் இதுவரை 1,500 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதே எண்ணிக்கையிலான வீடுகள் மின்சாரம் இன்றி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகள் ஏற்கெனவே தண்ணீரில் மூழ்கியுள்ள நிலையில் முக்கிய அரும்பொருளகங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களும் வெள்ள எச்சரிக்கையால் தயார்நிலையில் இருந்தன. நிரம்பி வழியும் ஆற்றின் ஓரம் தங்குவோருக்கும் அதன் வழியே பயணம் செய்பவர்களுக்கும் இந்தச் சூழ்நிலை வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயின் ஆறு நிரம்பி பாரிஸ் நகரின் பல பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கச் செய்துள்ளது. படம்: ஏஎஃப்பி

