ஆப்கானிஸ்தான் ராணுவ மையத்தை தாக்கிய பயங்கரவாதிகள்; 11 பேர் மரணம்

ஆப்கானிஸ்தான் ராணுவ மையத்தை தாக்கிய பயங்கரவாதிகள்; 11 பேர் மரணம்

1 mins read
a9763e4d-5513-482c-9c9d-7e51b1b054ce
-

காபூல்: ஆப்கானிஸ்தானின் முக் கிய ராணுவ பயிற்சியகத்திற்கு அருகில் உள்ள ராணுவ சோத னைச் சாவடியைக் குறைந்தது ஐந்து போராளிகள் நேற்று தாக்கிய சம்பவத்தில் 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமுற்றனர் என்று தற்காப்பு அமைச்சின் அதிகாரி கூறியுள்ளார். தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் ஃபஹிம் ராணுவ பயிற்சியகத்திற்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தலைநகரின் மையத்தில் ஆம்புலன் ஸில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டனர். சென்ற வாரம் காபூ லில் உள்ள இன்டர்கான்டினன்டல் ஹோட்டலில் நடந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். அந்த இரு தாக்கு தல்களுக்கும் தலிபான் பயங்கர வாத அமைப்பு பொறுப்பேற்றது.

தாக்குதல் நடந்த காபூலின் மார்ஷல் ஃபஹிம் ராணுவ பயிற்சியகத்திற்கு அருகில் சாலைகளை மூடிய நிலையில் நிற்கும் பாதுகாப்புப் படையினர். படம்: ராய்ட்டர்ஸ்