மலேசிய பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்கள் அதிருப்தி

மலேசிய பொதுத் தேர்தல்: இளம் வாக்காளர்கள் அதிருப்தி

1 mins read

பெட்டாலிங் ஜெயா: முடிவில்லா வாக்குவாதங்களில் ஈடுபடும் அர சியல்வாதிகளும் ஆளும் தேசிய முன்னணி மற்றும் எதிர்க் கட்சி கூட்டணியான பக்கத்தான் ஹரப் பான் ஆகிய இரு கட்சிகளின்பால் உள்ள அதிருப்தியுமே எதிர்வரும் மலேசியப் பொதுத் தேர்தலில் இளம் வாக்காளர்கள் பங்கு பெற தயக்கம் காட்டுவதற்கான காரண மாகக் கூறப்படுகிறது. 21 வயதுக்கும் மேலான மலேசியர்களில் மூன்று மில்லியன் பேர் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை என்று 'சண்டே ஸ்டார்' நாளிதழ் தெரிவித்தது.

வாக்களிப்பதற்கு பதிவு செய்து விட்டாலும் கூட, தனது வாக்குச் சீட்டை வீணடிப்பது அல்லது வாக்களிக்காமல் இருப்பது என்று தன் திட்டத்தைப் பற்றி கூறியுள் ளார் 24 வயது பட்டதாரி ஜஸ்டின் யோ. மலேசியாவில் உள்ள அரசி யல்வாதிகள் பலர் சிறு குழந்தை போல தங்களது எதிரிகளைத் தாக்குவதே முழுமுதல் வேலை யாகக் கருதி வருகின்றனர். நல்ல கொள்கைகளை வகுப்பது அல்லது நல்ல ஆட்சி முறையை நடைமுறைப்படுத்துவது என்று நாட்டுக்காகவும் மக்களின் நல னுக்காகவும் அவர்கள் பணியாற்று வதில்லை என்பது அவரின் கருத்து.