அறிமுக பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் வந்துள்ள தென்கொரிய தேசிய தற்காப்பு அமைச்சர் சோங் யங்மூ (படத்தில் இடது) நேற்றுக் காலை தற்காப்பு அமைச்சில் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென்னைச் சந்தித்து பேச்சு நடத்தினார். தமக்கு வழங்கப்பட்ட காவல் அணி மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். இஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கையும் திரு சோங் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். தங்கள் சந்திப்பின்போது, டாக்டர் இங்கும் திரு சோங் கும் வட்டார பாதுகாப்பு நிலவரம் பற்றி பேசியதுடன், இரு நாட்டு தற்காப்பு உறவைப் பலப்படுத்தும் வழிவகைகளையும் பரிந்துரைத்தனர்.
ஆசியான் தற்காப்பு அமைச்சர்கள் கூட்டத் தொடருக்கு தங்கள் ஒத்துழைப்பை மறுவுறுதிப்படுத்தினர். கடல்துறை பாதுகாப்பு குறித்த நிபுணர்கள் பணிக்குழு வுக்கு தென் கொரியாவும் சிங்கப்பூரும் கூட்டாக தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் ஆயுதப்படைகளும் தென் கொரிய ஆயுதப் படைகளும் வழக்கமான நிபுணத்துவ உரையாடல்கள், பயிற்சி வகுப்புகள் பரிமாற்றம் கருத்தரங்குகள், பன்னாட்டு பயிற்சிகள் மூலம் இருநாட்டு ஆயுதப்படைகளின் நல்லுறவைப் பலப்படுத்திக் கொண்டு வருகின்றன. அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுகளுக்கான ஃபுல்லர்டன் கருத்தரங்கில் திரு சோங் நேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.

