அகதிகள் வருவதற்கான தடை நீக்கம்

அகதிகள் வருவதற்கான தடை நீக்கம்

1 mins read

வா‌ஷிங்டன்: "அதிக ஆபத்து" பட்டியலில் உள்ள 11 நாடுகளிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. ஆனால், நாட்டினுள் வருபவர்கள் கடுமையாகக் கண்காணிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் அமல்படுத்திய திருத்தப்பட்ட அகதிகள் கொள்கையின்படி பெயர் குறிப்பிடப்படாத 11 நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வடகொரியா வோடு சேர்த்து முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 10 நாடுகள் அதில் அடங்கும் என்று யூகிக்கப்படுகிறது.