மலேசியாவில் பள்ளி பேருந்து விபத்து: மூன்று மாணவர்கள், ஓட்டுநர் மரணம்

1 mins read

பின்டுலு: மலேசியாவின் பின்டுலு-=மிரி பகுதியில் பள்ளிப் பேருந்தும் கனரக வாகனமும் மோதிய விபத்தில் மூன்று மாணவர்களும் ஓட்டுநரும் மரணமடைந்தனர். ஒன்பது வயதுக்கும் 11 வயதுக்கும் இடையே உள்ள அந்த மூன்று மாணவர்களும் பின்டுலு மருத்துவமனையில் உயிரிழந்தனர். மேலும் ஆறு மாணவர்களுக்குக் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்குச் சென்றபோது நேற்று காலை விபத்து நடந்ததாகக் கூறப்பகிறது. சம்பவ இடத்திலேயே பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார். கனரக வாகன ஓட்டுநருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. மீட்புப் பணியாளர்கள் ஆயுதங்களைக் கொண்டு பேருந்தில் இருந்த மற்றவர்களை மீட்டதாகக் கூறப்பட்டது.