தைவான்: நாட்டுக்குள் வெளி நாட்டு ராணுவம் படையெடுப்பு நடத்தினால் எவ்வாறு எதிர்த் தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற்ற வேண்டும் எனும் பாவனை ராணுவப் பயிற்சியை தைவான் நேற்று நடத்தியது. தைவான் அதிபர் சை இங் வென் மீது சீனா தரும் நெருக்க டியாலும் விமான சேவை வழித் தடங்கள் தொடர்பான பிரச்சினை யாலும் இரு நாடுகளுக்கிடையி லான உறவில் விரிசல் உண்டாகி யுள்ள நிலையில் உண்மையான குண்டுகளையும் தளவாடங்களை யும் கொண்ட பாவனை ராணுவப் பயிற்சியை தைவான் நடத்தியுள் ளது.
ஆண்டுதோறும் நடக்கும் ராணுவப் பயிற்சி, இம்முறை சீன படையெடுப்பை பாவனையாக கொண்டுள்ளதை அமைச்சு குறிப் பிட்டுக் கூறவில்லை. இருப்பினும், தைவான் நீரிணையில் அமைதி யைப் பாதுகாக்கவும் தேசிய பாது காப்பைக் கட்டிக்காக்கவும் இந்த ராணுவப் பயிற்சி நடத்தப்படுவ தாக அமைச்சு கூறியுள்ளது.
தைவான் ஒரு தனி தீவாக ஆளப் பட்டாலும் சீனாவின் ஒரு பகுதி யாகவும் தேவை ஏற்பட்டால் அதை இணைத்துக்கொள்ள முடியும் என்றும் சீனா கூறிவருகிறது.

