வாஷிங்டன்: தேர்தல்களில் குறுக் கிடும் செயலை ரஷ்யா இன்னும் நிறுத்தவில்லை என்றும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க தேர்தலிலும் ரஷ்யா தலையிடும் சாத்தியம் உள்ளது என்றும் மத்திய உளவுத்துறை அமைப்பின் இயக்குநர் மைக் பொம்பியோ கூறியுள்ளார். ரஷ்யாவின் செயல்பாடுகள் பெரிய அளவில் குறைந்ததாகத் தெரியவில்லை என்று திரு பொம்பியோ பிபிசி செய்தி நிறுவ னத்திற்கு அளித்த பேட்டியில் நேற்று முன்தினம் தெரிவித்து உள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ரஷ்யா தொடர்ந்து தனது தலையிடும் முயற்சியை மேற்கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், இருப்பினும் அமெரிக்கா ஜனநாயக முறைப்படி சுதந்திரமாகவும் நியாய மாகவும் தேர்தலை நடத்தும் என்று நம்பிக்கை கொள்வதாகக் குறிப் பிட்டார். ரஷ்யாவின் முயற்சிகளை எதிர் கொள்ளும் அளவிற்கு அமெரிக்கா தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். 2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டு முடிவுகளைத் தனது விருப்பப்படி மாற்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் முயற்சி எடுத்ததாக அமெரிக்காவின் முன் னணி உளவுத்துறை அமைப்புகள் 2016ஆம் ஆண்டு இறுதியில் தெரிவித்தன.
அந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளிண்டனின் பிரசாரத்தைக் கீழறுக்க முயற்சி செய்ததாகவும் ஜனநாயகக் கட்சியின் வேட்பாள ரான டோனல்ட் டிரம்ப்பின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்த தாகவும் கூறப்பட்டது. பெரிய அளவிலான உளவுத்துறை முயற்சி களை புட்டின் நிறுவியதாகக் கூறப்பட்டது.

