நஜிப்: எந்த நேரத்திலும் தேர்தலை அறிவிப்பேன்

1 mins read
6fbb667a-da5c-488a-b8a7-2d8ce931edf2
-

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தமக்குள்ளே ஓர் உந்துதல் ஏற்படும்போது நாட்டின் 14வது பொதுத் தேர்தலை அறி விக்கப்போவதாகக் கூறினார். தேர்தலின் தேதியை அறிவிப்ப தற்கு மலாய் மொழியில் 'இல் ஹாம்' என்று கூறப்படும் ஊக்கத் திற்காக தாம் காத்திருப்பதாக பிரதமர் நஜிப் நேற்று நடந்த இவ்வாண்டின் முதல் 'அம்னோ' கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தில் கூறி உள்ளார்.

திடமான பொருளியல் வளர்ச் சியும் மதிப்புமிக்க பங்குச் சந்தை யும் மலேசிய ரிங்கிட் நாணயத் தின் வலுவான மதிப்பும் இருக் கும் பட்சத்தில் எப்போது தேர்தல் அறிவிக்கப்படும் என்ற கேள் விக்கு அவர் அவ்வாறு பதிலளித் தார். அரசியலமைப்பு சாசனப்படி பொதுத் தேர்தல் ஜூன் மாதத்திற் குள் நடத்தப்படவேண்டும். அப் படி இல்லையெனில் நாடாளுமன் றம் தானாக கலைக்கப்படும் என்று திரு நஜிப் கூறினார். அம்னோ கட்சியும் தேசிய முன்னணி கூட்டணியும் தேர்த லுக்குத் தயார்நிலையில் இருப் பது தமக்குத் திருப்தியை அளிப்பதாக குறிப்பிட்டார். தேர்தல் தொகுதி எல்லை களை மீண்டும் மாற்றியமைப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்றும் அதன் பிறகு நாடாளுமன்றத்தில் அது குறித்து விவாதிக்கப்படும் என் றும் அவர் குறிப்பிட்டார்.2018-02-01 06:00:00 +0800