வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது முதல் வருடாந்திர நாட்டு நடப்பு குறித்த உரையைச் சிங்கப்பூர் நேரப்படி நேற்று காலை (அமெரிக்காவில் செவ்வாய்க்கிழமை இரவு) நிகழ்த் தினார். வலுவான எல்லைப் பகுதிகளும் தேசிய ஒற்றுமையும் தேவை என அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்தார். கசப்புணர்வு, பிரிவி னைப் போக்கு, அவதூறுகளால் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்டி ருந்த நிலையில், "ஒரே குழு, ஒரே மக்கள், ஒரே அமெரிக்க குடும்பம்" என்று வாழ அனைவரையும் அவர் கேட்டு கொண்டார்.
தேர்தலுக்குப் பின் அமெரிக்கா வில் 2.4 மில்லியன் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றில் உற்பத்தித் துறையில் மட்டும் 200,000 புதிய வேலைகள் உருவானதை அவர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாக தேங்கி இருந்த ஊதியம் இப்போது உயர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பங்குச் சந்தை வரலாறு காணாத அளவு 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் ($10.5 டிரில்லி யன்) மதிப்பைப் பெற்றுள்ளதாக கூறிய டிரம்ப், நாட்டின் வர்த்தக சட்டங்களைக் கொண்டு கடும் அமலாக்க நடவடிக்கை மூலம் அமெரிக்க ஊழியர்களையும் அமெ ரிக்க மதிநுட்பச் சொத்துகளையும் பாதுகாக்க தான் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறினார்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஆண்டுரையை ஆற்றினார். படத்தில் அவருக்குப் பின்புறம் துணை அதிபர் மைக் பென்ஸ் (இடது), நாடாளுமன்ற நாயகர் போல் ரயன். ஒரு மணி நேரம் 20 நிமிடங்களுக்கு நீடித்த அதிபர் டிரம்ப்பின் ஆண்டுரையே மூன்றாவது நீண்ட ஆண்டுரையாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் 2000ஆம் ஆண்டில் பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது ஒரு மணி நேரம் 29 நிமிடங்கள் உரையாற்றியுள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

