யங்கூன்: மியன்மார் அரசாங்கத் தலைவர் ஆங் சான் சூச்சியின் கடற்கரையோர இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டபோது சூச்சி அம்மை யார் அந்த வீட்டில் இல்லை என்றும் அப்பேச்சாளர் சொன் னார். அந்த குண்டு வீச்சில் அந்த வீட்டின் ஒரு பகுதி சேதம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. மியன்மாரில் ராணுவ ஆட்சி நீடித்தபோது அந்த வீட்டில்தான் ஜனநாயகப் போராட்டத் தலைவி ஆங் சான் சூச்சி 15 ஆண்டு காலமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
பெட்ரோல் குண்டு வீச்சுக்கான காரணம் இதுவரை தெரிய வில்லை. இது குறித்து விசாரணை நடைபெற்று வருவ தாக அரசாங்கப் பேச்சாளர் கூறினார். மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு ராணுவம் ஒடுக்கு முறையை பின்பற்றியதற்கு திருவாட்டி சூச்சி ஆரம்பத்தில் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வந்ததற்கு ஐநாவும் அனைத்துலக நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

