இந்தோனீசியாவின் ரியாவ் மாநிலத்தில் 73 இடங்களில் தீப்பற்றி எரிவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ காரணமாக சுமத்ரா தீவில் புகைமூட்டம் சூழ்ந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தோனீசியாவில் பரவும் காட்டுத் தீயால் ஆண்டுதோறும் புகை மூட்டப் பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் இந்தோனீசியா மட்டுமன்றி சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற பக்கத்து நாடுகளும் புகை மூட்டத்தால் பாதிக்கப்படுகின்றன.
காட்டுத் தீயை அணைக்க இந்தோனீசிய அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும் இப்பிரச்சினை தீரவில்லை. இந்தோனீசியாவில் சட்டவிரோதமாக சிலர் நிலங்களை சுத்தப்படுத்த தீ மூட்டுவதால் காட்டுத் தீ பரவுவதாக இந்தோனீசிய அதிகாரிகள் கூறுகின்றனர். புகைமூட்டப் பிரச்சினையால் பலரின் உடல்நிலை பாதிக்கப்படும் நிலையில் காட்டுத் தீயை அணைக்க பக்கத்து நாடுகள் உதவத் தயாராக இருக்கின்றன. படம்: ஏஎஃப்பி

