சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே பேச்சு

சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே பேச்சு

1 mins read
Google News Preferred Icon

பெய்ஜிங்: மிகப் பெரிய வர்த்தகக் குழுவுடன் சீனா சென்றுள்ள பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே நேற்று சீன அதிபர் ஸி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். இரு நாட்டு உறவு, வர்த்தகம், உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன. பின்னர் செய்தியாளர்கள் கூட்டத்தில் திரு ஸி ஜின்பிங்கு டன் கலந்துகொண்ட திருவாட்டி மே, பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையிலான தற்போதைய உறவு ஒரு பொற்காலம் என்று வர்ணித்தார்.

சீனாவுடன் உலகளாவிய பங்காளித்துவ உறவை ஏற்படுத் திக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார். வடகொரியாவின் மிரட்டல் உட்பட உலகளாவிய பிரச்சினை கள் குறித்து இரு தலைவர்களும் பேச்சு நடத்தியதாகக் கூறப் படுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினை கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாகத் தெரிகிறது.