வெள்ளை மாளிகையுடன் எஃப்பிஐ இயக்குநர் மோதல்

1 mins read

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் நேரடி தலையீடு இருந்ததாகக் கூறப் படுவது குறித்து மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வரும் வேளையில் குடியரசு கட்சி உளவியல் குழுவின் சர்ச்சைக் குரிய பதிவுக் குறிப்பை வெளியிடயிருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் கிறிஸ்டோபர் ரேக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

மத்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்பு நடைமுறைகள் பற்றிய அந்தக் குறிப்பில் முக்கிய தகவல்கள் விடுபட்டிருப்பதால் கையொப்பமிடாத அந்த அறிக்கையை வெளியிட வேண் டாம் என்று வெள்ளை மாளிகைக்கு தாங்கள் தெரியப்படுத்தியிருப்ப தாக எஃப்பிஐ அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.