காபூல்: ஆப்கானிஸ்தானில் அண் மையில் தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று ஆப்கானிஸ்தான் உளவுத் துறை தலைவர் முகமட் மசூம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் காபூலில் உள்ள ஒரு ஹோட்டல், போலிஸ் சோதனைச் சாவடி, ராணுவ பயிற்சிக் கல்லூரி ஆகிய இடங்களில் தலிபான் போராளிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தொடர் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான் போராளிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதையே காட்டு கின்றன என உலக நாடுகள் அச்சம் தெரிவித்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அண்மையில் தாக்குதல் நடத்திய வர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள் என்று ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி யுள்ளது. ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட போராளிகளை விசாரித்ததில் அவர்களுக்குத் தீவிரவாதப் பயிற்சிகள் பாகிஸ்தானில் அளிக் கப்பட்டது தெரியவந்துள்ளது என்று உளவுத் துறை தலைவர் தெரி வித்துள்ளார்.

