லாஸ் ஏஞ்சலிஸ் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு

லாஸ் ஏஞ்சலிஸ் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு

1 mins read
Google News Preferred Icon

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரு மாணவர்கள் காயம் அடைந்ததாக போலிசார் கூறினர். துப்பாக்கிச் சூட்டில் 15 வயதான மாணவர் ஒருவரும் அதே வயது மாணவி ஒருவரும் காயம் அடைந்ததாக போலிஸ் வட்டாரங்கள் கூறின. அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் 12 வயது பெண்ணை போலிசார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த இரு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவ்விருவரும் உடல் நிலை தேறி வருவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறினர். தலையில் சுடப்பட்ட மாணவர் உயிர் பிழைத்தது அதிர்ஷ்டவசமே என்கின்றனர் பள்ளிக்கூட ஆசிரியர்கள்.