சுரங்கத்தில் சிக்கியிருந்த 955 ஊழியர்கள் மீட்பு

1 mins read
3487a79d-8fc8-4879-9cf3-e456af5d3a52
-

ஜோகனஸ்பர்க்: தென்னாப் பிரிக்காவில் உள்ள பீட்ரிக்ஸ் தங்கச் சுரங்கத்தில் திடீரென்று மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து சுரங் கத்தினுள் சிக்கிக்கொண்ட சுரங்க ஊழியர்கள் 955 பேரை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். மின்சார விநியோகம் திரும்பக் கிடைத்ததும் ஊழியர்கள் அனைவரும் மீட்கப்பட்டதாக அந்த சுரங் கத்தை நடத்தும் நிறுவனத் தின் பேச்சாளர் ஒருவர் கூறினார். சுரங்க ஊழியர்கள் குறைந்தது 24 மணி நேரம் அந்த சுரங்கத்தினுள் சிக்கியிருந்ததாகக் கூறப்பட்டது.

அந்தச் சுரங்கம் அமைந்துள்ள பகுதியில் வீசிய பலத்த புயல் காற்றின் காரணமாக அந்த சுரங்கத்தில் மின்சார விநியோகம் தடைபட்டதாக நிறுவனப் பேச்சாளர் ஜேம்ஸ் வெல்ஸ்டெட் கூறினார். தங்க உற்பத்தியில் முதலிடத் தில் உள்ள நாடு தென்னாப்பிரிக்கா. ஆனால் அங்குள்ள தங்கச் சுரங்கங்களின் பாதுகாப்பு குறித்து அடிக்கடி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

மீட்கப்பட்ட சுரங்க ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்திலிருந்து ஊழியர் ஒருவர் மகிழ்ச்சியுடன் கை அசைக்கிறார். படம்: ஏஎஃப்பி