தாய்லாந்தில் கார் விபத்து; சிங்கப்பூரர் காயம்

தாய்லாந்தில் கார் விபத்து; சிங்கப்பூரர் காயம்

1 mins read
Google News Preferred Icon

பேங்காக்: தாய்லாந்தின் புக்கெட் உல்லாசத்தல தீவில் சிங்கப்பூரர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் அங்குள்ள நினைவிட சுவர் மீது மோதியதில் அந்த சிங்கப்பூரர் கடுமையாகக் காயம் அடைந் திருப்பதாக புக்கெட் தகவல்கள் கூறுகின்றன. காயம் அடைந்துள்ள 55 வயது ஆங் கோ லின் என்ற சிங்கப்பூரருக்கு விபத்து நிகழ்ந்த இடத்தில் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக போலிசார் கூறினர்.

புக்கெட் கடலோரப் பகுதிக்கு அருகில் உள்ள பாக்லோக் எனும் இடத்திலிருந்து மேற்குப் பகுதியை நோக்கி அந்த சிங்கப்பூரர் அவரது காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதாக நம்பப்படுகிறது என்று போலிசார் தெரிவித்துள்ளனர். கார் ஓட்டும்போது அவர் தூங்கியிருக் கலாம் என்றும் போலிசார் கருது கின்றனர். புக்கெட் நகரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சாலைக்கு அருகே அந்த நினைவிடம் உள்ளது. அந்த சாலை போக்கு வரத்துக்கு மூடப்பட்டிருப்பது பற்றி அவர் அறிந்திருக்காமல் இருந்திருக்காலம் என்று போலிசார் நம்புகின்றனர்.