வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் குற்றச் சாட்டு குறித்து விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழுவை தண்டிப்பதற்கு, சர்ச்சைக்குரிய ரகசிய குறிப்பை பயன்படுத்த வேண்டாம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் மூத்த ஜனநாயகக் கட்சியினர் எச்சரித் துள்ளனர்.
ரஷ்யாவின் தலையீடு குறித்து விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகரும் முன்னாள் எஃப்பிஐ இயக்குநருமான ராபர்ட் முல்லரை அதிரடியாக பதவியிலிருந்து நீக்குவதற்கு ஒரு போலி காரணமாக இந்த ரகசிய குறிப்பை அதிபர் பயன்படுத்த வேண்டாம் என்று ஜனநாயகக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அத்தகைய நடவடிக்கை முன்னாள் அதிபர் நிக்சனின் காலத்திற்குப் பிறகு இதுவரை பார்க்கப்படாத அரசியல் சாசன நெருக்கடியை உருவாக்கும் என்று அவர்கள் எச்சரிக்கை விடுத்துள் ளனர்.
குடியரசுக் கட்சியினர் எழுதிய இந்த ரகசிய குறிப்பு, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ அதன் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டுகிறது.

