வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தல் சயயத்தில் திரு டோனல்ட் டிரம்ப்பின் பிரசாரக் குழுவை அமெரிக்க புலனாய்வுத் துறை (எஃப்பிஐ) வேவு பார்த்தது தொடர்பில் குடியரசுக் கட்சியினர் தயாரித்த ரகசிய தகவல் குறிப்பை வெள்ளை மாளிகை வெளி யிட்டதைத் தொடர்ந்து எஃப்பிஐக் கும் வெள்ளை மாளிகைக்கும் இடையில் மோதல் உருவாகி யுள்ளது. இந்நிலையில் அந்த ரகசிய தகவல் குறிப்பு தொடர்பில் அமெரிக்க நீதித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத் துறை தலைவர்களை அதிபர் டோனல்ட் டிரம்ப் பதவியிலிருந்து நீக்கக் கூடும் என்று பரவலாகப் பேசப்படும் வேளையில் அத்தகைய நடவடிக்கையை திரு டிரம்ப் எடுக்கக்கூடாது என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிரம்ப்பிற்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த எச்சரிக்கை
1 mins read

