இந்தோனீசிய வெள்ளம், நிலச்சரிவுக்கு இருவர் பலி

இந்தோனீசிய வெள்ளம், நிலச்சரிவுக்கு இருவர் பலி

1 mins read
c6fa33b8-1713-4ff9-a5d3-08248673b5cf
-

ஜகார்த்தா இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் வெள்ளம் ஏற்பட்டதால் ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். அதே சமயத்தில் பல நகரங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் இருவர் மாண்டனர். போகோர் நகரில் நிலச்சரிவில் சிக்கிய காரில் 13 மணி நேரம் போராடிய ஒரு பெண்ணை மீட்புப்படையினர் உயிரோடு மீட்டனர். தொலைக்காட்சியில் காட்டப்பட்ட காணொளிப் படங்களில் ஆறுகள் கரைபுரண்டு ஓடுவதையும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் மரங்கள் சாய்ந்து உள்ளதையும் காணமுடிந்தது.